[X] Close

வடகொரியா மீதான பொருளாதாரத் தடையைத் தளர்த்த வேண்டும்: அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 16:56 pm
  • அ+ அ-

சரியான நேரத்தில் வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.

ஜி 20 மாநாட்டுக்குப் பிறகு வடகொரியா, தென் கொரியாவைப் பிரிக்கும் பான்முன்ஜன் பகுதியில் உள்ள ட்ரூஸ் கிராமத்துக்கு வந்த ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்மைச் சந்தித்தார்.

அதன்பின்னர் அதிபர் ட்ரம்ப், அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சரியான நேரத்தில் வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ''சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை சரியான நேரத்தில் தளர்த்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கா - வடகொரியா இடையே உள்ள பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close