[X] Close

கிம் - ட்ரம்ப் சந்திப்பு அற்புதமான நிகழ்வு: வடகொரியா


  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 18:44 pm
  • அ+ அ-

கிம் - ட்ரம்ப் இடையே நடந்த சந்திப்பு அற்புதமான நிகழ்வு என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பானின் ஒசாகா நகருக்கு அதிபர் ட்ரம்ப் சென்றிருந்தார்.

அப்போது அந்த மாநாட்டில் இருந்தவாறே அதிபர் ட்ரம்ப் , வடகொரிய அதிபர் கிம்முக்கு ட்விட்டரில் செய்தி அனுப்பினார். அதில், "ஜி 20 மாநாட்டை முடித்து எனது நாட்டுக்குத் திரும்பும் முன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் நாட்டில் இருந்தால், அவரைச் சந்தித்து கைகுலுக்கி ஒரு ஹலோ சொல்வேன்" எனத் தெரிவித்தார்.

இதன்படி வடகொரியாவும் சம்மதம் தெரிவித்து, அதிபர் ட்ரம்ப்புக்குப் பதில் அளித்தது. இதையடுத்து வடகொரியா, தென் கொரியாவைப் பிரிக்கும் பான்முன்ஜன் பகுதியில் உள்ள ட்ரூஸ் கிராமத்துக்கு ட்ரம்ப் வந்தார்.

வடகொரிய எல்லைக்குள் அதிபர் கிம் ஜாங் உன் இருந்தார். கிம் ஜாங் உன்னைப் பார்த்ததும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சில அடிகள் வடகொரிய எல்லைக்குள் நடந்து சென்று கிம்முக்கு கைகுலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதன்பின்னர் அதிபர் ட்ரம்ப், அதிபர் கிம் ஜாங் உன் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை குறித்து வடகொரியா தரப்பில் கூறுகையில், ''அற்புதமான நிகழ்வு. இந்தப் பேச்சுவார்த்தை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனைகளைக் கைவிடுவது தொடர்பாக ஆக்கப்பூர்வ உரையாடல்கள் தொடர் ஊக்கத்தை அளித்துள்ளன'' என்று தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close