[X] Close

எல்லை தாண்டி ஜாக்கிங் சென்ற பெண்ணுக்கு 2 வாரம் சிறை!


jogger-accidentally-crossed-into-us-from-canada-was-detained-for-2-weeks

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Jun, 2018 20:59 pm
  • அ+ அ-

ஜாக்கிங், வாக்கிங் எல்லாம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதுதான். ஆனால், ஜாக்கிங் செல்லும்போதுகூட கவனமாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணைப் போல் சிறைக்குக்கூட செல்ல நேரிடலாம்.
பீடிகை ரொம்ப என்று யோசிக்க வேண்டாம். செய்தி அப்படி.

19 வயது இளம் பெண் செடெல்லா ரோமன். பிரான்ஸ் நாட்டின் பிரஜையான இவர் அவ்வப்போது கனடாவில் வசிக்கும் தனது தாயைப் பார்க்க வருவதுண்டு. அப்படித்தான் அந்த முறையும் வந்திருந்தார். மே 21 காலையில் வழக்கம்போல் ஜாக்கிங் சென்றார். கனடா நாட்டின் கிழக்குக் கடற்கரையோர அழகு அவரை வெகுவாக ஈர்த்தது. வழி நெடுகிலும் இருந்த கடல் உணவுக் கடைகள். அழகான இயற்கைக்காட்சிகள் அவரை மெய்மறக்க செய்தன. இயற்கை அழகில் மயங்கியபடி கனடா நாட்டு எல்லையைத் தாண்டி அமெரிக்க எல்லைக்குள் நுழைந்துவிட்டார். ரோமனுக்கு எல்லை தாண்டியதே தெரியவில்லை. 
ஒரு அதிகாரி ரோமனைத் தடுத்து நிறுத்தி "நீங்கள் எல்லை தாண்டிவிட்டீர்கள்" என்று கூறியபோதுதான் அவருக்கே நடந்தது தெரிந்தது.

அப்போது ரோமனிடம் பிரான்ஸ் நாட்டுப் பிரஜை என்பதற்கான அடையாள அட்டை ஏதுமில்லை. ஜாக்கிங்தானே செல்கிறோம் என எடுத்துவரவில்லைபோல. ரோமனும் அதிகாரிகள் தன்னை எச்சரித்து அனுப்பிவிடுவார்கள் என்றே நினைத்திருக்கிறார். ஆனால், ரோமனை அவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுவிடவில்லை. அவரை கைது செய்துள்ளனர். 

2 வாரங்களுக்குப் பிறகுதான் அவரை விடுவித்துள்ளனர். ரோமன் பிரான்ஸ் நாட்டுப் பிரஜையாக இருந்து கனடா எல்லையைத் தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாலேயே இவ்வளவு நாட்களுக்குப் பின் அவரை விடுவிக்க நேர்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனிமேல் ஜாக்கிங் செல்லும்போது அனைவரும் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது நல்லதுதான் போலும்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close