[X] Close

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் பலி: சிரியா குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 11:37 am
  • அ+ அ-

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக சிரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான சனாவில் , “ சிரியாவில் டமாஸ்கஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது இதில் பொது மக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.   எங்கள் பகுதியில் எதிரி  நாட்டின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சிரிய ராணுவமும் உறுதிப் படுத்தியுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

 மேலும் சிரியாவில் உள்ள ஈரான் நிலைகளை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகல லண்டனில் இயங்கும் சிரிய கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இதுகுறித்து கருத்து கூற இஸ்ரேல் ராணுவம் மறுத்துவிட்டது. இந்தத் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் - துருக்கி இடையே மோதல் அதிகரித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close