[X] Close

பேரிடரை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்: ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்


20

  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 06:36 am
  • அ+ அ-

பேரிடரை எதிர்கொள்வதற்காக உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, ‘தரமான கட்டமைப்பு முதலீடு மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் பிரதமர் மோடி பேசும்போது, “உலக நாடுகளின் வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், இயற்கைப் பேரழிவுகளை எதிர்த்துப் போரிட, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு அவசியமாகிறது. இது தொடர்பாக உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என கடந்த ஆண்டு நடை பெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் வலியுறுத்தினேன். எனவே, ஜி-20 நாடுகள் இது தொடர்பான அனுபவங்களையும் நிபுணத்துவத் தையும் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.

மேலும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இயற்கை யாகவோ மனிதர்களாலோ ஏற்படும் பேரிடர்களால் ஏழைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பேரிடர் காலத்தில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதற்காக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஜ-20 மாநாட்டில் வலியுறுத்தி உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

பருவநிலை ஒப்பந்தம்

பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த, ஜி-20 அமைப்பைச் சேர்ந்த 19 உறுப்பு நாடுகள் இந்த மாநாட்டில் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா மட்டும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஏற்கெனவே பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு அதிகாரம்

ஆண்களுக்கு நிகராக பெண் களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் கிடைக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஜி-20 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆஸி. பிரதமருடன் செல்பி

இந்த மாநாட்டின் இடையே ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் பிரதமர் மோடியும் நேற்று தனியாக சந்தித்துப் பேசினர். விளையாட்டு, சுரங்க தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்கெனவே உள்ள இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது மோரிசன் மோடியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனுடன், ‘எவ்வளவு நல்லா இருக்கு மோடி’ என இந்தி மொழியில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மோடி, “நண்பரே, நம் இருதரப்பு உறவின் ஆற்றல் குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தோனேசியா, பிரேசில், துருக்கி, சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி நேற்று தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் 3 நாள் பயணத்தை முடித் துக் கொண்ட பிரதமர் மோடி நேற்று தாயகம் திரும்பினார். - பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close