[X] Close

பாலின பாகுப்பாட்டை உடைத்து வென்ற அசியாவின் கதையைத் தெரிந்து கொள்வோம்!


pakistani-woman-who-drove-a-minibus-to-support-her-family

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Jun, 2018 16:43 pm
  • அ+ அ-

இன்று சர்வதேச விதவைகள் தினம். உலகம் முழுவதும் 258 மில்லியன் விதவைப் பெண்கள் உள்ளனர் என்கிறது ஐ.நா., புள்ளிவிவரம். அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் வெளியே தெரிவதில்லை. கணவனை இழந்து வாடும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., ஜூன் 23-ம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் கணவனை இழந்த பெண்கள் பொருளாதார நெருக்கடியுடன் சமூக நெருக்கடியையும் சந்திக்க நேரிடுகிறது. தெற்காசிய நாடுகளில் பரவலாக இப்படித்தான் இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த அசியா என்ற பெண் தான் பட்ட துயரத்தையும் துயரத்திலிருந்து மீண்ட கதையையும் விவரித்திருக்கிறார்.

அசியா பாகிஸ்தானில் பிறந்தவர். 15 வயதிலேயே அவருக்கு திருமணம் செய்யப்பட்டது. அசியாவுக்கு 21 வயது ஆன போது ஒரு மகன் மகள் இருந்தனர். அப்போதுதான் அந்த துயரம் நடந்தது. குடிப்பழக்கம் கொண்ட அசியாவின் கணவர் சாலை விபத்தில் இறந்தார். பொருளாதாரத்தில் நலிவடைந்திருந்த அசியாவின் குடும்பத்துக்கு அது பேரிழப்பு. என்ன செய்வது என்று நின்றிருந்தார் அசியா. ஆனால், எப்படியாவது இரண்டு குழந்தைகளையுமே காப்பாறியாக வேண்டும்.

அப்போதுதான் உறவினர் ஒருவரின் உதவியுடன் மினிபஸ் ஒன்றை வாங்கினார் அசியா. அதற்கு அவரே ஓட்டுநரானார். அக்கம்பக்கத்திலிருக்கும் பள்ளிக்குழந்தைகளை பள்ளிகளில் கொண்டுவிடும் பணியைச் செய்தார். பெண் பிள்ளைகளை அசியாவின் வாகனத்தில் அனுப்ப தாய்மார்கள் ஆர்வம் காட்டினர்.

அன்று தொடங்கி 35 ஆண்டுகளாக அசியா இந்தப் பணியை செய்து வருகிறார். ஆரம்பத்தில் ஏளனப் பேச்சுகளை சந்தித்தார் அசியா. ஆனால், இப்போது அவர் பாதையில் நிறைய பெண்கள் சுயமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அசியா கணவனை இழந்த இளம் விதவைகளுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்.

சர்வதேச விதவைகள் தினத்தை ஒட்டி பிபிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "என்னைப் போன்ற கனவனை இழந்த பெண்களுக்கு எல்லாம் ஓர் அறிவுரை சொல்ல விரும்புகிறேன். யாரையும் சார்ந்திருக்காதீர்கள். சொந்தக்காலில் நில்லுங்கள். உங்கள் கடின உழைப்பின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close