[X] Close

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் மோடி


20

  • kamadenu
  • Posted: 27 Jun, 2019 12:34 pm
  • அ+ அ-

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்.

பிரதமர் மோடி ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (புதன்கிழமை) காலை ஜப்பானின் ஒசாகா நகரம் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து மோடி, ட்ரம்ப் உள்ளிட்ட  உலகத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்கிறார் மோடி.

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் 6-வது ஜி 20 மாநாடு இதுவாகும். ஜி 20 மாநாடு ஒசாகா நகரில் வரும் 28 - 29 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில், ''ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார். வரும் நாட்களில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கியப் பிரச்சினைகளில் இந்தியாவின் கருத்தை முன்வைக்க இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளது.

 

plz.jpg

ஜப்பான்  வந்தடைந்த மோடியை இந்தியர்கள் பலர் ஒசாகாவில் வரவேற்றனர்.

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் புறப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close