[X] Close

இராக்கில் ஐஎஸ் பெண் தீவிரவாதிக்கு 15 ஆண்டு சிறை


15

  • kamadenu
  • Posted: 26 Jun, 2019 18:53 pm
  • அ+ அ-

இராக்கில்  இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐஎஸ் பெண் தீவிரவாதிக்கு அந்நாட்டு  நீதிமன்றம் 15 ஆண்டுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து இராக் ஊடகங்கள் புதன்கிழமை கூறும்போது, “ சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண்  ஐஎஸ்ஸில் உறுப்பினராக உள்ளவரை திருமணம் செய்திருக்கிறார். இதில் அந்த  நபர் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழிருக்கிறார். அப்ப்பெண் குறித்த கூடுதல் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இராக் நீதிமன்றம் அப்பெண்ணுக்கு 15 ஆண்டுக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

 ஈரான் நீதிமன்றம் இந்தவாரம் பத்திற்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை விதித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் ஐஎஸ் இயக்கம் மற்றும்  தீவிரவாத  நடவடிக்கைகளில்  தொடர்புடைய சுமார் 19,000 பேரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.

இதில் சுமார் 3,000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஏபி செய்தி நிறுவனம் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close