[X] Close

மெலானியாவின் சர்ச்சைக்குரிய ஓவர்கோட்!- சப்பைகட்டு கட்டும் ட்ரம்ப்


melania-trump-wears-i-really-don-t-care-do-u-jacket

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Jun, 2018 12:57 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் அண்மையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளைக் காணச் சென்றிருந்தார்.

வெளிநாடுகளில் இருந்து தஞ்சம் புகுபவர்களின் குழந்தைகளைத் தனியாக பிரித்து முகாம்களில் தங்க வைத்திருக்கிறது அமெரிக்கா. இந்த நடைமுறையை ரத்து செய்து நேற்றுதான் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு கையெழுத்தானபின்னர், அந்தக் குழந்தைகளைப் பார்க்கச் சென்ற மெலானியா அணிந்திருந்த ஓவர் கோட்டில், "I really don’t care, do u?" (எனக்கு எந்த அக்கறையும் இல்லை.. உங்களுக்கு) என எழுதப்பட்டிருந்தது.

அவரது ஓவர்கோட் வாசகம் ஊடகச் செய்தியானது. எல்லையில் பிரிந்துகிடக்கும் குடும்பங்களைக் காண தான் வெறுப்பதாக மெலானியா ஏற்கெனவே கூறியிருந்ததுதான் மீண்டும் சர்ச்சை கிளம்பக் காரணம்.
இது குறித்து ட்ரம்ப் மனைவியின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி க்ரிஷாம், "அது வெறும் ஓவர்கோட். அவ்வளவே. அதிலிருந்த வாசகங்களில் உள் அர்த்தம் ஏதுமில்லை. ஊடகங்கள் அவரது உடைக்குப் பின்னால் சுற்றாது என நம்புகிறேன்" எனக் கூறியிருந்தார்.

சப்பைகட்டு கட்டும் ட்ரம்ப்:
மனைவியின் ஓவர்கோட் வாசகம் சர்ச்சையாகவே ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "மெலானியா அணிந்திருந்த ஓவர்கோட்டில் இருந்த வாசகம் போலி செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கான பதில். அந்த ஊடகங்களின் நேர்மையின்மையை மெலானியா புரிந்து கொண்டார். அதனாலேயே எனக்கு அக்கறை இல்லையென்ற தொணியில் ஓவர்கோட் அணிந்திருக்கிறார்" என ட்வீட் செய்தார்.

மனைவியின் செய்கைக்கு சப்பைகட்டு கட்டும் விதத்தில் ட்ரம்ப் ட்வீட் செய்திருப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close