[X] Close

பொருளாதாரத் தடையால் எங்கள் எலும்புகள் உடைந்துவிட்டன: ஈரான் மக்கள் வேதனை


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 16:03 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது தொடர்ந்து செலுத்தும் பொருளாதாரத் தடையால் தங்கள் எழும்புகள் உடைந்துவிட்டதாக ஈரான் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரான் மக்களின் அன்றாடம் வாழ்க்கை பெரும் சிரம நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஈரானியர்களில் பலர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதும், ஈரான் அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஷிவ கேஷாவர்ஸ் கூறும்போது, “பொருளாதார போர்தான் இங்கு உண்மை நிலவரம்.. மக்கள் அனைவரும் பெரும் அழுத்தத்தில் உள்ளனர். ஈரானிய தலைவரகள் எங்களை வலுவாக இருக்குமாறும், அழுத்தங்களை சகித்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர். 

ஆனால் எங்கள் எலும்புகள் உடையும்  சத்தத்தை ஏற்கனவே நாங்கள்  கேட்டுவிட்டோம்”என்று கூறியிருக்கிறார்.

நாட்டில் வேலையில்லாமை அதிகரித்து வருகிறது என்று ஈரான் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரான் தொடர்ந்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போர் தொடுக்கவும்  தயங்கமாட்டேன் என்று ட்ரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close