[X] Close

கர்ப்பிணிகளுக்கு வாழ்நாள் ஆஃபர்!- தரம்தாழ்ந்த விளம்பரத்துக்கு குவியும் கண்டனங்கள்


burger-king-says-sorry-for-russian-world-cup-pregnancy-ad

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Jun, 2018 12:21 pm
  • அ+ அ-

கால்பந்து திருவிழாவைப் பயன்படுத்தி டிவி தொடங்கி டிஷர்ட்வரை மார்க்கெட்டிங் களைகட்டத் தொடங்கியுள்ளது.

அந்த வரிசையில் பர்கர் கிங் என்ற புகழ்பெற்ற பர்கர் நிறுவனம் தனது விளம்பரத்துக்கு பயன்படுத்திய தரம்தாழ்ந்த கருப்பொருள் பல்வேறு தளங்களில் இருந்தும் கண்டனத்தைப் பெற்றுவருகிறது.ன்இதனால் சம்மபந்தப்பட்ட விளம்பரத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்திருக்கிறது.


சர்ச்சை என்ன?
ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஃபிபா 2018 கால்பந்து திருவிழாவில் கலந்து கொண்டுள்ள சர்வதேச வீரர்கள் மூலம் கர்ப்பமடையும் ரஷ்யப் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் பர்கர் கிங் இலவசமாக பர்கர் வழங்கும் என்று அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.
இந்த விளம்பரம் பெண்களை இழிவுபடுத்துவதாக ஆபாசமாக இருப்பதாகக் கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனையடுத்து அந்த விளம்பரத்தை பர்கர் கிங் நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

அத்துடன் ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், "எங்களது ரஷ்ய கிளை சார்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்துக்காக வருந்துகிறோம். அது அப்பட்டமாக ஆபாசமாகவும் அடுத்தவர் மனதைப் புண்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. இந்த விளம்பரம் எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கே உகந்தது அல்ல. இது போன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வராமல் இருக்க ஆவண செய்வோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close