[X] Close

ஈரான் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: இங்கிலாந்து


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 12:47 pm
  • அ+ அ-

கல்ஃப் ஆப் ஓமன் பகுதியில் தாக்குதல் நடத்துவதை ஈரான் நிறுத்த வேண்டும் இங்கிலாந்து கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மே மாதம் ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப்பெரிய மையத்தில் 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலை ஈரான் பின்னணியில் ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் இதனை ஈரான் மறுத்தது.

இந்நிலையில் ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அமைச்சர்  ஆண்ட்ரிவ் மோரிசன் கல்ஃப் ஆப் ஓமன் பகுதியில் நடத்தப்படும் தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்தச் சுற்றுப்பயணம் குறித்து மோரிசன் கூறும்போது, ''ஈரான் அரசுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு இந்தப் பயணம் வாய்ப்பை அளித்துள்ளது'' என்றார்.

சூழல் மிகவும் தீவிரமாக உள்ளதால் இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் ஜெரமி ஹண்ட்  தொடர்ந்து ஈரான் அதிகாரிகளுடன் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close