[X] Close

ஈரான் விவகாரம்; ட்ரம்ப் - சவுதி இளவரசர் ஆலோசனை


  • kamadenu
  • Posted: 22 Jun, 2019 18:00 pm
  • அ+ அ-

ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் தொலைபேசியில் உரையாடியதாக செய்தி வெளியானது.

ஈரானுடனான சமீபத்திய பிரச்சினை, மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்திரதன்மையைக் கொண்டுவர சவுதியின் பங்கு மற்று உலக அளவில் எண்ணெய் சந்தை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் பேசிக்கொண்டதாக சினுவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு வான் எல்லை விதிகளை மீறியதால் சுட்டோம் என்றது. ஆனால் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது. அமெரிக்க எண்ணெய் டாங்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close