[X] Close

உலகின் மிக வயதான ஒராங்குட்டான் குரங்கு மரணம்


world-s-oldest-sumatran-orangutan-puan-dies-at-62

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Jun, 2018 16:15 pm
  • அ+ அ-

உலகின் மிக வயதான ஒராங்குட்டான் குரங்கு 'புவான்' ஆஸ்திரேலியாவின் பெர்த் விலங்கியல் பூங்காவில் மறைந்தது. அதற்கு வயது 62. இந்த வகை குரங்கினத்துக்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகள்தான் பூர்வீகம்.

1956-ல் புவான் சுமத்ரா தீவுகளில் பிறந்தது. 1968-ல் ஜோஹோர் சுல்தான் ஆஸ்திரேலியாவின் பெர்த் விலங்கியல் பூங்காவுக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். அதற்குப் பதிலாக ஆஸ்திரேலியா சில வனவிலங்குகளை சுல்தானுக்கு பரிசாக வழங்கியது.
அன்றிலிருந்து புவான் பெர்த் பூங்காவில் வாழ்ந்தது. புவானுக்கு 11 குட்டிகள். அதன் வம்சாவளி வந்த ஒராங்குட்டான்களின் எண்ணிக்கை 54. இவற்றில் 29 இப்போது உயிருடன் உள்ளன.

புவான் குறித்து பெர்த் பூங்காவின் கண்காணிப்பாளர் ஹோலி தாம்சன், "எங்கள் பூங்காவின் மிகப் பழமையான உறுப்பினர் என்ற பெருமை புவானுக்கு உண்டு. அதுதவிர நாங்கள் முன்னெடுத்த உலகப்புகழ் பெற்ற ஒராங்குட்டான் இனப்பெருக்க திட்டத்திற்கு முன்னோடியாக இருந்ததே புவான் என்பதில் எங்களுக்கு பெருமை. புவான் இங்கு தங்கியிருந்த காலத்தில் அதை கவனித்துக் கொண்டதை குறிப்பாக அதன் கடைசி காலகட்டத்தில் அதை கவனித்துக் கொண்டதை பெருமையாக நினைக்கிறேன்" என்றார்.

புவான் மறைவு குறித்து பெர்த் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், "புவான் சுதந்திரமான பெண் குரங்கு. அதன் பாரம்பரியத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அதற்கு ஏதாவது விருப்பமற்றதை செய்தால் உடனே அது காலை ஓங்கி தரையில் அடித்து எதிர்ப்பைத் தெரிவிக்கும். புவானை யாராலும் ஏமாற்ற முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close