[X] Close

யோகாவால் செழிப்பான சீன கிராமம்


  • kamadenu
  • Posted: 22 Jun, 2019 07:23 am
  • அ+ அ-

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த சீன கிராமம் ஒன்று தற்போது யோகாவின் காரணமாக செழிப்பாகியுள்ளது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங் கிலிருந்து 300 கிலோமீட்டர் தொலை வில் யுகோலியாங் என்ற கிராமம் உள்ளது. 260 பேர் மட்டுமே இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். முன்பு இந்த கிராமத்தில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வந்தது. ஆனால் பலர் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். விவசாயத்துக்கு உதவ யாரும் இல்லாததால் கிராமத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வறுமையின் பிடியில் கிராம மக்கள் சிக்கினர்.

இந்நிலையில் யோகா பயிற்சியாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் குயினோவா தானியத்தை விளைவிக்க கிராம மக்களுக்கு அரசு உதவியது. அவர்களுக்கு மானியமும் வழங்கி, குயினோவா தானியத்தை உற்பத்தி செய்யவும் ஊக்குவிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி லு வென்சென் கூறும்போது, “வறுமையின் பிடியில் இருக்கும் கிராம மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட இங்கு யோகா அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களது ஆண்டு வருமானம் 1,100 யுவான்களாக அதிகரித்தது.

இதில் அரசின் மானியத் தொகை சேர்க்கப்படவில்லை. அது தனியாக வழங்கப்பட்டு வருகிறது. யோகாவால் அந்த கிராமமே புகழ்பெற்றுவிட்டது. யுகோலியாங் கிராமத்தில் விளையும் வேளாண் பொருட்களுக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இங்கு விளையும் குயினோவா என்ற புரதச் சத்து மிகுந்த தானியத்தை யோகா பயிற்சியாளர்கள் அதிகம் வாங்குகின்றனர். இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் அவர்கள் அதை வாங்குகின்றனர். மேலு்ம் தங்களது மாணவர் களும் அதை வாங்க பரிந்துரைக் கின்றனர்.

நாங்கள் இந்த கிராமத்துக்கு வரும்போது 254 பேர் வறுமையின் பிடியில் இருந்தனர். இது தற்போது 137-ஆகக் குறைந்துள்ளது. இவர்களும் விரைவில் வறுமை யின் பிடியில் இருந்து விடுபடுவர். இந்த கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை யோகா மாற்றிவிட்டது. அவர் களுக்கு வாழ்க்கையில் நம்பிக் கையை யோகா தந்துள்ளது. வறுமையில் சிக்கித் தவித்த இந்த கிராமம் தற்போது யோகாவின் காரணமாக செழித்து இருக்கிறது” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close