[X] Close

கடிகாரத்தை ஓரங்கட்டும் நார்வே தீவு: சூரியன் மறையாத 69 நாட்களுக்கு மட்டும்


69

  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 17:52 pm
  • அ+ அ-

-ஏபி

உலகின் மற்ற பகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையில் உழலும் நார்வே நாட்டின் சொம்மாரோயி தீவு மக்கள் உலகின் முதல் நேரமற்ற மண்டலமாக அறிவிக்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்று நார்வேயைப் பற்றி சொல்லப்படுவதுண்டு. நார்வே நாட்டின் சொம்மாரோயி தீவில் தற்போது சூரியன் மறையாத காலம். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிறையவே மாறியிருக்கிறது.

ட்ராம்சே நகரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள இத் தீவு மக்கள் தங்களது பாரம்பரியமான வணிக நேரங்களிலிருந்தும், வழக்கமான நேரத்தைக் கடைப்பிடித்தல் முறைகளிலிருந்தும் விடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் நேரம் காலம் பார்த்து வேலை செய்வது முறையாக ஒரே நேர அட்டவணையில் வாழ்வது அவர்களால் கடைபிடிக்க முடியாத ஒன்றாகும். இதனால் உலகின் முதல் நேரமற்ற மண்டலமாக அறிவிக்குமாறு தங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சொம்மாரோயி தீவில் வசிக்கும், கேஜெல் ஓவ் ஹெவ்டிங் தெரிவித்ததாவது:

''ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ளது சொம்மாரோயி தீவு. இங்கு நவம்பரிலிருந்து ஜனவரி வரை இருட்டாகவே இருக்கும். ஆண்டில் சில மாதங்கள் இதற்கு நேர் எதிரான அனுபவங்களும் அவர்களுக்கு இருப்பதால் இந்த 69 நாட்களும் விலை மதிப்பற்றவையாக அவர்கள் கருதி அவற்றைப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.

இந்த நள்ளிரவுச் சூரியன் காலகட்டம் தொடங்கி ஒருமாதமாகிவிட்டது. அதாவது கடந்த மே 18 அன்று தொடங்கியது. வரும் ஜூலை 26, வரை கிட்டத்தட்ட 69 நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்.

கடிகார நேரமற்ற மண்டலத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் நேரக்கட்டுப்பாடுகளை தூக்கியெறிவது. சொம்மாரோயி தீவு மக்களுக்கு, குறிப்பாக மாணவர்கள், முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.

இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் அதே நேரத்தில் இது மிகவும் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயமும் கூட.

கடிகாரத்தை நிறுத்திவைப்பதே இதற்கு சரியான தீர்வு. ஆனால், இது மிகவும் சிக்கலானதாக இருப்பதால் நாங்கள் முற்றிலும் நேரமில்லாத மண்டலமாக மாறமாட்டோம்.

ஆனால், நாங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு நேரக் கணக்கீடு வைத்துள்ளோம். இதனால் மேலும் நெகிழ்வுத்தன்மையைப் பெறலாம். இதன்மூலம் பகல் நேரத்தில் சரிசெய்துகொள்ளமுடியும்."

நேரக் கணக்கீட்டுக்குள் சிக்கவேண்டாம் என்ற யோசனைக்கு மக்கள் பக்குவப்பட்டுவிட்டார்கள். நேரத்தைப் பார்த்து பார்த்து அதற்கேற்ப தங்களைத் தயார் செய்துகொள்ளும் மக்கள் நேரத்தால் அழுத்தப்பட்டார்கள். அதுமட்டுமினறி இதனால் மனஅழுத்தத்திற்கும் ஆளான மக்களையும் நான் பார்த்திருக்கிறேன்.''

இவ்வாறு கேஜெல் ஓவ் ஹெவ்டிங் தெரிவித்தார்.

நார்வே நாட்டின் டிராம்சோ நகரத் தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சொம்மாரோயி தீவின் மொத்த மக்கள் தொகையே 350 பேர்தான். இங்கு மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலா ஆகியன மிக முக்கியத் தொழில்கள்.

பின்லாந்து கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த பகல் சேமிப்பு நேரத் திட்டத்தை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக மக்களிடம் 70,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களைச் சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close