[X] Close

தாகூரின் பொன் மொழிகளை தெரியாத இம்ரான் கான்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 10:15 am
  • அ+ அ-

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘யாரேனும் ஞானத்தை புரிந்துக் கொள்ளவும், தேடி அடையவும், மன நிறைவுடன் வாழவும் கீழே உள்ள கிப்ரானின் வார்த்தைகள் வழி வகுக்கும்’ என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை இணைத்து பதிவிட்டிருந்தார்.

தாகூர் 

கலீல் கிப்ரான் லெபனான் நாட்டு எழுத்தாளர். ஆனால் இம்ரான் கான் குறிப்பிட்டு எழுதிய வாசகங்கள், அவை கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கூறிய வாசகங்கள்.

இதுமட்டுமின்றி, இந்த பதிவில் சில எழுத்துப்பிழைகளும் இருந்ததால் அதன கிண்டல் செய்து அந்த வார்த்தைகள் கவிஞர் கலீல் கிப்ரானுடையது அல்ல. அவை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகள் என சுட்டிக்காட்டி பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் கிண்டல் செய்தார். இதையடுத்து நெட்டிசன்களும் அவரை கடுமையாக கிண்டல் செய்தனர்.

‘இம்ரான் கான் ஒரு நாட்டின் பிரதமர் என்பதை உணர்ந்து சமூகவலைதளங்களை பயன்படுத்த வேண்டும்’ என சிலர் பதிவிட்டுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close