[X] Close
 

காணாமல் போன பெண் மலைப்பாம்பு வயிற்றிலிருந்து சடலமாக மீட்பு


indonesian-woman-went-missing-she-was-found-inside-a-7-metre-long-python

  • பாரதி
  • Posted: 16 Jun, 2018 15:14 pm
  • அ+ அ-

இந்தோனேஷியாவில் காணாமல் போன 54 வயது பெண்ணின் சடலம் மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வா டிபா என்ற 54 வயது பெண் நேற்று (வெள்ளிக்கிழமை) வீட்டின் பின்புறம் இருந்த காய்கறித் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணை தேடித் திரிந்தனர். சுலாவேஸி கரையோரம் வீங்கிய வயிற்றுடன் நகர முடியாமல் 23 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று அசைவற்று இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்தப் பாம்பு கிடந்த சிறிது தூரத்தில் டிபாவின் செருப்பு கிடந்தது. இதனால் ஊர்க்காரர்கள் டிபாவை மலைப்பாம்புதான் விழுங்கியிருக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

உடனே போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் முன்னிலையில் மலைப்பாம்பின் வயிற்றுப்பகுதி வெட்டப்பட்டது. அதனுள் டிபா சடலமாக இருந்தார்.

இந்த வகை பாம்புகள் கால்நடைகளையே குறிவைத்து தாக்கும். மிகவும் அரிதாக மனிதர்களைத் தாக்கும். கடந்த மார்ச் மாதம் விவசாயி ஒருவரை மலைப்பாம்பு விழுங்கியது.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close