[X] Close

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: சீனாவிடம் பிரதமர் மோடி உறுதி


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 11:08 am
  • அ+ அ-

பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்னர் பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் மோடி தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் 2 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி  வியாழக்கிழமை காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் ஓமன், ஈரான் வான் வழியாக பிஷ்கெக் சென்றார்.

இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோருடன் பிரதமர் மோடி தனியாக சந்தித்துப் பேசினர்.

பாகிஸ்தானிலிருந்து ஏவப்படும் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து ஜி ஜின்பிங்கிடம் கவலை தெரிவித்த  பிரதமர் மோடி தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தையை தொடர முடியும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இவர்களது சந்திப்பில், ஜி ஜின்பிங் மோடியிடம்  “ இந்தியாவுடன் சீனா நெருக்கமான கூட்டணியை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளது. இதற்கான சீனா இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற  தயராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த  மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடி பங்கேற்ற போதிலும், இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close