[X] Close

நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்த போதே சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிவி தொகுப்பாளினி


kuwaiti-tv-host-fired-on-air-after-complaints-over-her-clothes-report

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Jun, 2018 12:32 pm
  • அ+ அ-

குவைத் நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கும் போதே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அமல் அல் அவாதி என்ற அந்த தொகுப்பாளினி இது குறித்து விளக்கமளிக்குமாறு குவைத் அரசின் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு சமூகவலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குவைத் தொலைக்காட்சியில் அமல் அல் அவாதி தொகுப்பாளியாக பணியாற்றி வருகிறார். ரம்ஜான் மாதத்தை ஒட்டி தி வின்னிங் டச் என்ற கேம் ஷோவை அவர் தொகுத்து நடத்தி வருகிறார். 

செட்டில் இருக்கும் காட்சிகளையும் செட்டுக்கு வெளியே தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிரும் பழக்கம் கொண்டவர் அமல் அல் அவாதி. அந்த வகையில் அண்மையில் அவர் சில போட்டோக்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள்தான் இப்போது சர்ச்சையாகி அவர் சஸ்பெண்ட் ஆகக் காரணமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தின் கீழ் நெட்டிசன்கள் பலரும் இது என்ன உடை என்ற பாணியில் கடுமையாக விமர்சித்திருந்தனர். 

ஆனால், அவாதியோ ரம்ஜான் மாதம் என்பதால் எனது உடையிலும் பேச்சிலும் நான் மிக மிகக் கவனமாக இருந்தேன். உடைக் கட்டுப்பாட்டை ஒருபோதும் மீறியதில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது சஸ்பென்ஷன் குறித்து தகவல்தொழில்நுட்ப அமைச்சக விளக்கமளிக்க வேண்டும் அல் அவாதி தனது சமூகவலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மாதம் பசிமா அல் ஷமார் என்ற தொகுப்பாளினியும் இதேபோல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனது சக ஆண் பத்திரிகையாளர் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கும்போது அழகாக இருப்பதாக விமர்சித்ததற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close