[X] Close

சிரியாவுக்கு துருக்கி மிரட்டல்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 17:39 pm
  • அ+ அ-

சிரியா தொடர்ந்து எங்களது கண்காணிப்பு பகுதிகளை தாக்கினால் நாங்களும் தகுத்த நடவடிக்கை எடுப்போம் என்று துருக்கி எச்சரிக்கைவிடுத்துள்ளது.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள துருக்கி கண்காணிப்பு பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லட் கூறும்போது, “ சிரிய இந்தத் தாக்குதலை தொடர்ந்தால் துருக்கி இது தகுந்த நடவடிக்கையை எடுக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றார்.

இதற்கு சிரியா தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close