[X] Close

பிடிக்காத வெஜ் சாலட் தர்றாங்க! பெற்றோர் மீது சிறுமி போலீசில் புகார்


12-year-old-calls-911-because-parent-served-salad-for-dinner

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Jun, 2018 10:18 am
  • அ+ அ-

கனடா நாட்டில் 911 என்ற எண் நம்மூர் 100 போன்ற அவசர உதவி எண். இந்த எண்ணுக்கு 12 வயது சிறுமி ஒருவர் தொடர்பு கொண்டு தனக்குப் பிடிக்காத காய்கறி சாலடை தனது பெற்றோர் தருவதாகப் புகார் அளித்திருக்கிறார்.

இத்தகவலை நோவா ஸ்காட்டியா போலீஸார் வெளியிட்டுள்ளனர். "கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எங்களுக்கு ஒரு ஃபோன் வந்தது. மறுமுனையில் பேசியவர் தன்னை 12 வயது சிறுமி என அறிமுகம் செய்தார். வீட்டில் இரவு உணவுக்கு பெற்றோர் தனக்கு காய்கறி சாலட் கொடுத்து அதை கட்டாயமாக சாப்பிடும்படி வற்புறுத்துவதாகத் தெரிவித்தார். இதனைக் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் அதே சிறுமியிடமிருந்து அழைப்பு வந்தது. எப்போது வருவீர்கள் என அந்த சிறுமி கேட்டார். இதனையடுத்து நான் 911 பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம்" என்றனர்.

911 சேவையை துஷ்பிரயேகம் செய்வது அனைத்து வயதினருக்கும் தடை செய்யப்படுகிறது. 911-ஐ தவறாகப் பயன்படுத்தினால் உண்மையிலேயே தேவையில் இருப்பவர்களுக்கு உதவ முடியாமல் போகலாம் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில், ஒன்டோரியோ நகரில் மகனுடன் பீட்சா அருந்தவந்த பெண் ஒருவர் தனக்கு பீட்சா தர ஓட்டல் ஊழியர்கள் காலம் தாழ்த்துவதாக 911-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு போலீஸார் சற்று கடுமையாகவே நிலைமையை எடுத்துரைத்து எச்சரித்தனர். 911 காவல்துறை, தீயணைப்பு மற்று ஆம்புலன்ஸ் உதவிக்கான எண் பீட்சாவுக்கான எண் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல், குழந்தைகளுக்கும் 911 குறித்த விழிப்புணர்வை கனடா போலீஸார் ஏற்படுத்திவருகின்றனர்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close