[X] Close

வாரம் தோறும் ‘கிரெடிட் கார்டு' அளவிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் மனிதர்கள்: சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 07:37 am
  • அ+ அ-

ஒரு கிரெடிட் கார்டுக்கு (கடன் அட்டை) சமமான பிளாஸ்டிக் பொருட்களை மனிதர்கள் வாரந்தோறும் உட்கொண்டு வருவதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புறச் சூழலுக்கு மட்டுமே தீமை உண்டாகிறது என எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், மனிதர்களுக்கு நேரடியாகவே மிகப்பெரிய ஆபத்தை பிளாஸ்டிக் ஏற்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ‘நியு காஸ்டில்' பல்கலைக்கழகம் சார்பில் பிளாஸ்டிக் தொடர்பான சர்வதேச ஆராய்ச்சி நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகள்நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது மக்களிடையே அதிகரித்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான டன் எடைகொண்ட பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு, பிளாஸ்டிக்கை தயார் செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் உருவாகின்றன.

இந்தக் கழிவுகள் அனைத்தும் கடல்மற்றும் நீர் நிலைகளிலேயே வெளியேற்றப்படுகின்றன. இதனால், அவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து விடுகின்றன. இந்த நீர்நிலைகளே குடிநீர் ஆதாரமாக விளங்குவதால், மனிதர்கள் தங்களுக்கு தெரியாமலேயே பிளாஸ்டிக்கை நாள்தோறும் உட்கொண்டு வருகின்றனர். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல. மேலும், கடல் நீரில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளானது அதன் உப்பு, மீன்களில் கலந்து விடுகின்றன. இவையும் உணவுப் பொருட்களில் சேர்வதால் நாம் உட்கொள்ளும் பிளாஸ்டிக்கின் அளவு அதிகரிக்கிறது.

இவ்வாறு, மிக நுண்ணிய அளவிலான 2,000 பிளாஸ்டிக் பொருட்களை மனிதர்கள் வாரந்தோறும் உட்கொண்டு வருகின்றனர். அதாவது, இந்த அளவானது, 5 கிராம்எடைகொண்ட ஒரு கிரெடிட் அட்டைக்கு சமமானதாகும். இது, மனிதர்களின் உடல்நிலைக்கு மிகப் பெரிய தீங்கினை விளைவித்து வருகிறது. எனவே,பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை உலக நாடுகள் அனைத்தும் கருத்தில்கொண்டு, அவற்றை கட்டுப்படுத்த உடனடிநடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close