[X] Close

ஈரானில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 18:28 pm
  • அ+ அ-

அமெரிக்கா - ஈரானுக்கு இடையே நிகழும் மோதலுக்கு இடையே ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே ஈரானுக்குச் சென்றுள்ளார்.

அணு ஆயுத சோதனை ஓப்பந்த மீறலில் அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் விரிவடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் நட்பு பாராட்டி வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே ஈரானுக்கு அரசியல் ரீதியாக சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) ஈரான் தலைநகர் தெஹ்ரான் வந்தடைந்த ஷின்சே அபேவை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப், மெக்ராபாத் விமான நிலையத்தில் வரவேற்றார்.

ஷின்சேவின் இந்தப் பயணம் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து, அந்நாட்டுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்நிலையில் அணு ஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.

இதில் விதிமுறைகளைப் பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் அதிகமாகி உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close