[X] Close

1.5 மில்லியன் டாலர் லாட்டரி: 38 நாட்கள் தெரியாமல் ஃபிரிட்ஜில் வைத்திருந்த சுவாரசியம் 


australian-lottery-winner-had-ticket-on-fridge-for-38-days

கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 13 Jun, 2018 16:57 pm
  • அ+ அ-

தான் வாங்கிய லாட்டரி சீட்டு வெற்றி பெற்றது தெரியாமல் 6 வாரங்கள் வரை பிரிட்ஜில் வைத்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர்.

ஆஸ்திரேலியாவின் கேத்தரின் என்ற பகுதியைச் சேர்ந்தவருக்கு, அவர் வாங்கிய டாட்ஸ்லாட்டோ லாட்டரி சீட்டு எண்ணுக்கு தேசிய அளவில் 1.5 மில்லியன் டாலர்கள் ஜாக்பாட் அடித்தது. ஆனால் அவரது லாட்டரி சீட்டு சரியாக பதிவு செய்யப்படாததால் யார் வெற்றியாளர் என்று டாட்ஸ் லாட்டோ நிறுவனத்துக்குத் தெரியவில்லை. அந்நிறுனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், வெற்றியாளர் தாமாக வருவார் என்று காத்திருந்தனர். 

இது பற்றி பேசிய வெற்றியாளர், "எனது பகுதியில் இருப்பவருக்கு பரிசு விழுந்தது என்று எனக்குத் தெரியும். ஆனால் அது நானாக இருப்பேன் என்று நினைக்கவே இல்லை. எனது ஃபிரிட்ஜில் தான் இந்த சீட்டை வைத்திருந்தேன். அற்புதமாக உணர்கிறேன். இவ்வளவு பணத்தை என் வாழ்க்கை முழுவதும் உழைத்தால் தான் சம்பாதித்திருக்க முடியும். எங்களுக்குத் தேவையான சில பொருட்களை இதை வைத்து வாங்கி மீதமுள்ள மொத்த பணத்தை வைத்து ஒரு வீடு வாங்க திட்டமிட்டிருக்கிறோம்" என்று கூறினார். 

இந்த லாட்டரி சீட்டை விற்ற கேத்தரின் எக்ஸ்போஷர் ஃபோட்டோகிராபிக்ஸ் என்ற கடையின் உரிமையாளர் கேத்தி ஸ்மால், ஒருவழியாக வெற்றியாளரிடம் பரிசு சேர்ந்துவிட்டதில் மிக்க மகிழ்ச்சி என்றார். ஒவ்வொருநாளும் இவர் கடைக்கு வருபவர்கள், வெற்றியாளர் கிடைத்துவிட்டாரா என்று கேட்டு நச்சரித்துள்ளனர். இனி அவர்களுக்கு, ஆமாம் என்று பதில் சொல்லி அனுப்பிவிடலாம் என்று நிம்மதி பெருமூச்சுவிடுகிறார் கேத்தி. 

-ஐஏஎன்எஸ்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close