[X] Close

அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடத்தில் மோதிய ஹெலிகாப்டர்: ஒருவர் பலி


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 11:49 am
  • அ+ அ-

அமெரிக்காவின் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில்  உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மேற்பகுதியில் மோதியதில் பைலட் பலியானார்.

இதுகுறித்து  நியூயார்க் போலீஸார் கூறும்போது, ”அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் திங்கட்கிழமை ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக கட்டிடத்தில் மோதி தரையிரங்கியது. இதில் அந்த ஹெலிகப்டரின் பைலட் உயிரிழந்தார்.

 

nhgb.jpg 

 

ஹெலிகாப்டரிலிருந்து எரிபொருள் வெளியேறியதால் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அனைத்தனர். இந்த விபத்து காரணமாக கட்டிடத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்றனர்.

இந்த விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன் தேவையான உதவிகளை செய்ய நிர்வாகம் தயராக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ர்மப் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close