[X] Close

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 18:31 pm
  • அ+ அ-

வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரியின் முன் ஜாமீன் மனுவை பாகிஸ்தான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள், ''பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யல் தல்பூர் ஆகியோருக்கு வங்கிக் கணக்கு மோசடி வழக்கில் ஜாமீன் மனுவை நிராகரித்து இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று செய்தி வெளியிட்டன.

ஆனால் அவரது சகோதரி தல்பூர் கைது செய்யப்பட்டதற்கான உறுதியான தகவல் இதுவரை வெளிவரவில்லை.

சுமார் 150 மில்லியன் ரூபாயை போலியான கணக்குகள் மூலம் வெளிநாட்டுக்குப் பரிமாற்றம் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close