[X] Close

ட்ரம்ப்பின் பிரம்மாண்ட காரை எட்டிப்பார்த்த கிம்


kim-gets-a-glimpse-of-the-beast

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Jun, 2018 11:17 am
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த சந்திப்பின்போது வழக்கமான ஆலோசனைகளைத் தாண்டி சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்தன. அதில் ஒன்றுதான் அதிபர் ட்ரம்ப்பின் சொகுசுக் காரை வடகொரிய அதிபர் கிம் எட்டிப்பார்த்த நிகழ்வு.

ட்ரம்பின் காருக்கு பெயர் தி பீஸ்ட் (The Beast). அந்தக் கார் லிமோசின் பிராண்டைச் சேர்ந்தது. நேற்று இருநாட்டு அதிபர்களும் சந்தித்தபின் உணவு அருந்தினர். அதன் பின்னர் அந்த கறுப்பு நிற பிரம்மாண்ட லிமோஸின் காரை நோக்கிச் சென்றனர்.
அப்போது, ட்ரம்ப் கார் கதவைத் திறக்க கிம் காருக்குள் எட்டிப்பார்த்தார். அந்த காரின் முகப்பில் அமெரிக்கக் கொடி பொருத்தப்பட்டிருந்தது. கிம்மும் ட்ரம்ப்பும் காருக்கு அருகே நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். காருக்கு அருகே கிம் புன்னகைத்தவாறே நின்றார்.

இருவரின் உடல்மொழியிலும் நட்பு மிளிர்ந்தது. இதற்கு முன்னதாக கிம்மை ட்ரம்ப் லிட்டில் ராக்கெட் மேன் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார். அதே ட்ரம்ப் தற்போது கிம்மை, "தனது தேசத்தை விரும்பும் திறமைமிக்க சமாதானத்தூதுவர்" என்று பாராட்டியிருக்கிறார்.

இதேபோல் இன்னொரு சுவாரஸ்யமும் நிகழ்ந்தது. வடகொரிய அதிபரின் பாதுகாப்பில் உச்சக்கட்டமாக, 'டாய்லட்' கொண்டு வரப்பட்டிருந்தது. நட்சத்திர ஹோட்டலில் 'டாய்லட்' இருந்த போதிலும் அதை அதிபர் கிம் ஜாங் பயன்படுத்தவில்லை.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் எப்போதும் சுயபாதுகாப்பில் தீவிரமாக ஈடுபாடு காட்டுபவர். கடந்த 32 ஆண்டுகளில் வடகொரியாவின் அதிபர் வேற்று நாட்டு மாநாட்டில் பங்கேற்கச் செல்வது இதுதான் முதல் முறையாகும்.

ஆதலால், எதிரிகள் எந்தவிதத்திலும் எதிரிகளிடத்தில் தன்னைப்பற்றிய விவரங்கள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். உடலில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருட்கள் சிறுநீர், மலம் ஆகியவை கூட எதிரிகள் கைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் கிம் கவனமாக இருந்துள்ளார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close