[X] Close

பொருளாதாரத்தை மீட்டெடுக்க பினாமி சொத்துகளுக்கு வரி: பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 14:08 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும்நிலையில், பினாமி சொத்துக்களுக்கு வரி விதித்து அதனை வசூலிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மக்கள்  ஜூன் 30-ம் தேதிக்குள் தங்கள் சொந்துக் கணக்குகளை வெளியிட வேண்டும் என பிரதமர் இம்ரான் கான் அறிவுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் முதன்முறையாக ஒதுக்கீட்டை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1800 கோடி டாலராக உள்ள நிலையில், நாட்டின் பெட்ரோலியத் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்யும் போது, பொருளாதாரம் இன்னும் மோசமாகத்தான் செய்யும். இதுபோக, ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 150 ரூபாய் என்ற அளவில் சரிந்துள்ளது.

சர்வதேச நிதியமான (ஐஎம்எப்பிடம் கடன் வாங்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. ஆனால் தருவதாக ஒப்புக் கொண்ட 600 கோடி டாலரைக் கூட இப்போது தருவதற்கு ஐஎம்எப் தயங்கி வருகிறது. பொதுவாக கடன் கொடுக்கும்போது, வாங்கும் நாடுகளுக்கு பலவிதமான நிபந்தனைகளை சர்வதேச நிதியம் விதிக்கும். இதுபோல பல நிபந்தனைகளை அந்நாடு விதித்துள்ளது.

இந்தநிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பணம் திரட்டவும் புதிய திட்டம் ஒன்றை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் வரி கட்டாததால் நாடு பெரும் நெருக்கடியை நோக்கி செல்கிறது, ஜூன் 30-ம் தேதிக்குள் தங்கள் சொந்துக் கணக்குகளை வெளியிட வேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின்படி பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்களை வெளிப்படையாக அறிவித்து அதற்குரிய வரியை செலுத்தி விட்டால் அவற்றை பறிமுதல் செய்யாமல் விட்டுவிடுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் பல கோடி ரூபாய் பணம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close