[X] Close

சிங்கப்பூரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கைகுலுக்கல்  


mr-trump-and-mr-kim-jong-un-shared-a-historic-handshake

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Jun, 2018 09:22 am
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர். உலகமே உற்று நோக்கிய இந்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்தது. சிங்கப்பூரில் நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரின் சென்டோசா தீவில் நடந்த இந்த சந்திப்பின்போது கிம் ஜோங் உன்னும் டொனால்டு ட்ரம்பும் பரஸ்பரம் கைகளைக் குலுக்கிக் கொண்டனர். அவர்கள் பின்னணியில் வடகொரியா மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகள் இருந்தன. இருவரும் சற்று கூடுதல் நேரம் கைகளைக் குலுக்கிக் கொண்டிருந்தனர். அந்த தருணத்தை தங்கள் கேமராக்குள் நிறுத்த புகைப்படக்காரர்கள் ஆயிரமாயிரம் முறை க்ளிக் செய்ய அந்த சத்தமே ஒருவகை இசைபோல் பரவியது. பின்னர், ட்ரம்ப் வழிகாட்ட இருவரும் ஒரு அறைக்குச் சென்றனர்.

கிம்மை சந்தித்தது குறித்து ட்ரம்ப், "அபாரமான உணர்வு. நாங்க மிகப்பெரிய ஆலோசனை நடத்தப்போகிறோம். எங்களது உறவு பயங்கரமானதாக இருக்கப்போகிறது" என்றார். கிம் தனது மொழிபெயர்ப்பாளர் மூலம், "இங்கே வருவது அவ்வளவு எளிதாக அமையவில்லை. பல்வேறு தடைகள் இருந்தன. தடைகளைத் தகர்த்து நாங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறோம்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close