[X] Close

பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது: இரு நாடுகளுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின


6

  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 09:01 am
  • அ+ அ-

மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகளுக்கிடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த மே 30-ம் தேதி நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். மீண்டும் பிரதமரான பிறகு மோடி, தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று மாலத்தீவு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். அப்போது இருதரப்பு உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவை பலப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட 6 முக்கிய துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாட்டினருக்கான அந்நாட்டின் உயரிய ‘நிஷான் இஸ்ஸுதீன்’ விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் சோலி வழங்கி கவுரவித்தார். இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்த மோடி வழங்கி வரும் சேவை, பெருந்தன்மையுடன் மாலத்தீவுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவது ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, “மாலத்தீவு மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில், இந்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் தென் பகுதியில் ‘வெள்ளிக்கிழமை மசூதி’யை கட்டித் தர இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அங்கு நகர்ப்புற மேம்பாட்டு மையம் கட்டப்படும். கொச்சி, மாலத்தீவு இடையே கப்பல் சேவையை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close