[X] Close

ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளி அமெரிக்க வாழ் பெண்கள்


3

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 15:21 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் உள்ள 80 பணக்கார பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்கள் அனைவருமே தங்களது சொந்த உழைப்பில் முன்னேறி பணக்காரர்கள் ஆனவர்களாவர். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

80 பேரடங்கிய இந்தப் பட்டியலில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங் நிறுவமானமான அரிஸ்டா நெட்வொர்க்ஸின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஜெயஸ்ரீ உல்லாள் 18-வது இடத்தில் உள்ளார். சின்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் நீரஜா சேத்தி, ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் நேஹா நர்கெடே ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஏபிசி சப்ளை நிறுவனத்தின் தலைவர் டைன்ஹென்ட்ரிக்ஸ் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கட்டிட பொருட்கள் மொத்த விற்பனை நிறுவனமாக ஏபிசி உள்ளது. 72 வயதாகும் இவரின் சொத்து மதிப்பு 700 கோடி டாலராகும்.

18-வது இடத்தில் உள்ள ஜெயஸ்ரீ உல்லாளின் சொத்து மதிப்பு 140 கோடி டாலராகும். 58-வயதாகும் இவர் அரிஸ்டா நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வைத்துள்ளார். லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இவர் அமெரிக்காவின் பணக்கார பெண்மணிகளுள் ஒருவராக உள்ளார்.

பட்டியலில் 23-வது இடத்தில் உள்ள நீரஜா சேத்தியின் சொத்து மதிப்பு 100 கோடி டாலராகும். தனது கணவர் பாரத் தேசாயுடன் இணைந்து 1980-ம் ஆண்டு மிச்சிகனில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் 2 ஆயிரம் டாலர் முதலீட்டில் இந்நிறுவனத்தைத் தொடங்கினார்.

நேஹா நெர்ஹடே பட்டியலில் 60-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 36 கோடி டாலராகும். இந்தப் பட்டியலில் ஓப்ரா வின்ஃபிரே (10), டி.வி. புகழ் கைல் ஜென்னர் (23), ஃபேஷன் டிசைனர் டோரி புரூச் (29), பாப் பாடகி ரிஹானா (37), மடோனா (30), பாடகி பியோன்ஸ் (51), நூலாசிரியர் டேனியல் ஸ்டீல் (56), டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் (80) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close