[X] Close

ஃபோர்ப்ஸ் சுயமாக முன்னேறிய அமெரிக்க பெண்மணிகள் பட்டியல்: 3 பேர் இந்திய வம்சாவளியினர்


3

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 12:40 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் சுயமாக முன்னேறிய பெண்களில் 80 பேர் பட்டியலை  ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் மூன்று பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள்.

சினிமா, விளையாட்டு, அரசியல் என பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும். 

இதில் தற்போது அமெரிக்காவில் சுயமாக முன்னேறிய கோடிஸ்வர பெண்கள் 80 பெயரின் பட்டியலை ஃபோர்ம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பெண்களும் இடப்பெற்றுள்ளனர்.

பட்டியலில் அரிஸ்டா நிறுவனத்தின் ஜெயஸ்ரீ உல்லல்  18வது இடம் பிடித்துள்ளார். இந்திய வம்சாவளியான இவர் லண்டனில் பிறந்து தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்

அடுத்ததாக  நீர்ஜா சேத்தி 23வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர். இவர்களைத் தொடர்ந்து  நேகா 60 வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 360 மில்லியன் டாலர்.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் டையின் ஹெட்ரிக்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close