[X] Close

அமெரிக்கப் பள்ளிக்குழந்தைகள் பாடும் லாக்டவுன் ரைம்ஸ்.. இணையத்தில் குவியும் விமர்சனங்கள்


u-s-children-learn-lockdown-rhyme-at-school

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jun, 2018 10:01 am
  • அ+ அ-

அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பள்ளி ஒன்றில் எழுதித் தொங்கவிடப்பட்டிருந்த ரைம்ஸை (குழந்தைகள் பாடம்) புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் அந்த ட்வீட்டை பதிவு செய்த 24 மணி நேரத்திலேயே 18,000 ரீட்வீட்கள் ஆகியிருந்தன. தற்போது இன்னும் நிறைய ரீட்வீட் ஆகியிருக்கலாம். ஜார்ஜி கோஹென் என்ற அந்தப் பெண்ணின் ட்வீட்டுக்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒரு பள்ளிக்கூட ரைம்ஸில் அப்படி என்னதான் இருக்கிறது என்கிறீர்களா? அந்த ரைம்ஸுக்கு லாக்டவுன் ரைம்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

"Lockdown, Lockdown, Lock the Door 
Shut the lights off say no more
Go behind the desk and hide
Wait until it’s safe inside
Lockdown, lockdown its all done
Now its time to have some fun"

இதுதான் அந்த ரைம்ஸ். இதன் தமிழாக்கம்..

"மறைந்துகொள், மறைந்துகொள், கதவைப்பூட்டு
எல்லா விளக்குகளையும் அணைத்துவிடு எதுவும் பேசாதே
இருக்கைக்கு கீழே மறைந்துகொள்
எல்லாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்
அதுவரை மறைந்திரு
எல்லாம் சரியாகிவிட்டால் எழுந்து விளையாடு.."

அமெரிக்காவில் அண்மையில் பள்ளிக்கூடங்களைக் குறிவைத்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே, பள்ளிக்குழந்தைகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும் கற்றுக்கொடுக்கும் விதத்தில் இந்த ரைம்ஸ் புகட்டப்படுகிறது.

இந்த ரைம்ஸின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள கோஹென், "எனது குழந்தை இன்னும் சில நாட்களில் பள்ளிக்குச் செல்லவுள்ளார். அதற்குள் இந்த சூழல் மாற வேண்டும். அப்போது இந்த ரைம்ஸ் எனது குழந்தைக்கு கற்றுத்தரும் தேவை இருக்கக்கூடாது. இப்படி ஒரு ரைம்ஸை சொல்லிக்கொடுப்பதால் பள்ளிக்கூடம் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த ரைம்ஸை வரவேற்று சிலரும் சிறு பிள்ளைகளுக்கு இப்படி ஒரு ரைம்ஸை சொல்லித்தரத் தேவையில்லை என்று சிலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், சோமர்வில் பகுதியின் மேயர் ஜோசப் கூர்டடோன், "இத்தகைய துரதிர்ஷ்டவசமான உலகில்தான் நாம் வாழ்கிறோம்" என்று அமெரிக்கப் பள்ளிகளில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close