[X] Close

9 வயது வளர்ப்பு மகளை கொன்ற இந்தியப் பெண்ணுக்கு 22 ஆண்டு சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு


9-22

  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 10:05 am
  • அ+ அ-

அமெரிக்காவில் 9 வயது வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் கியூன்ஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் ஷாம்தாய் அர்ஜுன் (55). இந்திய வம்சாவளிப் பெண். இதே கட்டிடத்தில் மற்றொரு குடியிருப்பில், உணவகம் ஒன்றில் பணியாற்றும் சுக்ஜிந்தர் சிங் என்ற பஞ்சாபி வசித்து வந்தார். சுக்ஜிந்தர் சிங் வேலைக்குச் செல்லும்போது, தாயில்லாத தனது 9 வயது மகள் அஷ்தீப் கவுரை ஷாம்தாய் பொறுப்பில் விட்டுச் செல்வார்.

இந்நிலையில் கடந்த 2016 ஆகஸ்ட் 19-ம் தேதி அஷ்தீப் கவுர் குளியல் அறை தொட்டியில் இறந்து கிடந்தார். சிறுமியின் உடலில் சிராய்ப்புகள் இருந்தன.

இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் அண்டை வீடுகளில் வசிப்பவர்கள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் அச்சிறுமியை ஷாம்தாய் கழுத்தை நெரித்துக் கொலை செய்து குளியல் அறை தொட்டியில் போட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஷாம்தாய் குற்றவாளி என நீதிபதி ஒருவரால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கியூன்ஸ் உயர் நீதிமன்ற நீதிபதி கென்னத் ஹோல்டர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ஷாம்தாய்க்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கியூன்ஸ் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜான் ரியான் கூறும்போது, “கற்பனையிலும் பார்க்க முடியாத கொடூர குற்றத்தை அப்பெண் செய்துள்ளார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்கும் வகையிலான தண்டனையை நீதிபதி அளித்துள்ளார்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close