[X] Close

சர்வதேச சமுத்திர தினத்தில் ஐ.நா., பொதுச்செயலாளரின் வேண்டுகோள்


world-oceans-day-2018-know-this-years-theme

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Jun, 2018 16:14 pm
  • அ+ அ-

சர்வதேச சமுத்திர தினம் இன்று (ஜூன் 8-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. கடந்த 200-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சர்வதேச சமுத்திர தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கொள்கையாக பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சமுத்திரத்தை உருவாக்குதல் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தக் கொள்கையை நிர்ணயிக்கக் காரணம், ஆண்டுதோறும் கடலில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 8 மில்லியன் டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பேரிழப்பைச் சந்திக்கின்றன. 

சர்வதேச சமுத்திர தினத்தை ஒட்டி, ஐ.நா., பொதுச்செயலாளர் அந்தோனி குத்ரெஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நமது நீல நிற கோளை பிளாஸ்டிக்குக்கு காவு கொடுக்க முடியாது. மாற்றம் நம் ஒவ்வொருவரிடமும் இருந்தே சாத்தியமாகிறது. நாம் செய்யக்கூடிய சிற்சில செயல்கள்கூட இந்த சமுத்திரத்தை பாதுகாக்கக்கூடும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close