[X] Close

ஆப்கனில் அரசு ஊழியர்களைக் குறிவைத்து குண்டுவெடிப்பு: 5 பேர் பலி


5

  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 18:33 pm
  • அ+ அ-

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசு ஊழியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள், ”ஆப்கன் தலைநகர் காபூலில் அமெரிக்கன் பல்கலைக்கழகத்துக்கு அருகே உள்ள டருள் அமன் சாலையில் அரசு ஊழியர்களை ஏற்றி வந்த பேருந்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆப்கனில் நடந்த 5 குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கன் உள்நாட்டுப் போர்

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close