[X] Close

24 மணிநேரத்தில் வெப்பம் மிகுந்த 8 இந்திய நகரங்கள்


24-8

  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 18:11 pm
  • அ+ அ-

கடந்த 24 மணிநேரத்தில் உலகில் அதிக வெப்பம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் உள்ள முதல் 15 இடங்களில் 8 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்று பருவ நிலைகளைக் கண்காணிக்கும் எல் டோராடோ இணையதளம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தாலும் உலகமயமாக்கல் காரணமாகவும் உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டில் ஜப்பான் போன்ற நாடுகளில் அனல் காற்று காரணமாக 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே பல்வேறு நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் உலகில் அதிக வெப்பநிலை நிலவிய நகரங்களின் பட்டியலை பருவநிலை மாற்றங்களைக் கண்காணிக்கும் இணையதளமான எல் டோராடோ வெளியிட்டுள்ளது.

அதில் முதல் 15 இடங்களில் 8 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்றும் மீதமுள்ள நகரங்கள் இந்திய அண்டை நாடுகளான பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவை என்றும் எல் டோராடோ கூறியுள்ளது.

அதன்படி  திங்கட்கிழமையன்று இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையாக ராஜிஸ்தான் மாநிலத்திலுள்ள சுரு மாவட்டம் உள்ளது.  இங்கு வெப்பநிலை 48. 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பந்தா (47.4 டிகிரி செல்சியஸ்) , ஹரியாணவின் நருனால் (47.2 டிகிரி செல்சியஸ்), கோட்டா, ஹைதராபாத், ஜெய்பூர்,லக்னோ மற்றும் டெல்லி ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் அனல் காற்று நீடிக்கும். இதனால் பாதுகாப்பாக இருக்கும்படி  அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close