[X] Close
 

கைகளைக் கட்டி மண்டியிட்டு கெஞ்சினார் கிம்: ட்ரம்ப் வழக்கறிஞரின் சர்ச்சைப் பேச்சு


giuliani-kim-jong-un-begged-for-summit-to-take-place

படம்: ராய்ட்டர்ஸ்

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Jun, 2018 13:10 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ட்ரம்ப்பின் வழக்கறிஞர் ரூடி ஜிலானி தெரிவித்துள்ள கருத்து ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேலில் செய்தியாளர்களில் சந்திப்பின்போது பேசிய ரூடி, "அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபரை சந்திப்பதை ரத்து செய்தார். அப்போது வடகொரியாவிடமிருந்து எப்படியாக அந்த சந்திப்பை மீண்டும் திட்டமிடும்படி கோரிக்கை எழுந்தது. இந்த நிலையை சிறப்பாக விளக்க வேண்டுமானால் ட்ரம்பிடம் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கைகளைக் கட்டி மண்டியிட்டு கெஞ்சினார் என்றுதான் சொல்ல வேண்டும்" எனப் பேசினார்.

ஜிலானியின் இந்த கருத்து விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

கண்டுகொள்ளாத நிர்வாகம்..
ஜிலானியின் இந்த பேச்சால் ட்ரம்ப் - கிம் சந்திப்பில் பின்னடைவு ஏதும் ஏற்பட்டுவிடும் எனக் கூறப்பட்ட நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஜிலானியின் பேச்சை அர்த்தமற்றது எனத் தள்ளுபடி செய்துள்ளார்.
இது குறித்து அவர், "ரூடியின் பேச்சு அமெரிக்க நிர்வாகத்தின் சார்பானது அல்ல. அவருக்கும் அமெரிக்கா - வடகொரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சிறிய அறையில் அமர்ந்துகொண்டு தனது கருத்துகள் மீது பெரிதாக கவனம் ஒன்றும் இல்லாமல் விளையாட்டக் கூறியுள்ளார். நாங்கள் இதைவிட முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்" என்றார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close