[X] Close

பாகிஸ்தானில் சாலை விபத்து; 13 பேர் பலி


13

  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 14:14 pm
  • அ+ அ-

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வேன் ஒன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். இதில் குழந்தைகளும் அடக்கம்.

இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், ''பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கவுட்டாவிலிருந்து வந்த வேன் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். இதில் குழந்தைகளும், பெண்களும் அடக்கம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியானது.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மோசமான சாலைகளும், ஒட்டுநர்களின் பொறுப்பின்மையுமே காரணம் என்று கூறப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close