[X] Close

வளைகுடாவில் ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க ராணுவ வாகனங்கள் உள்ளன: ஈரான் எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 17:34 pm
  • அ+ அ-

-ராய்ட்டர்ஸ்

எங்கள் வளைகுடாவில் ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க ராணுவம் உள்ளன என்று ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் மோதல் எதாவது ஏற்பட்டால் பெட்ரோல் ஒரு பீப்பாயின் விலை 100 டாலர்களுக்கும் மேல் உயர்த்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

ரகசிய அணு ஆயுதத் திட்டத்தில் ஈடுபடுவதாக ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டியது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்துவதற்காக முயன்ற அமெரிக்கா சர்வதேச தடைகளுக்கும் வழிவகுத்தது. எனினும் இத்தடை நீக்கப்பட ஈரானும் உலக வல்லரசும் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டன.

ஆனால் இவ் ஒப்பந்தத்திலிருந்து திடீரென வாஷிங்டன் வெளியேறிய நிலையில் ஒரு ஆண்டுக்குப் பின்னர் ஈரானும் அமெரிக்காவும் கடந்தமாதம் முதலே கடும் மோதலுக்கு தயாராகி வருகின்றன.

வாஷிங்டன் மீண்டும் தடையை விதித்ததோடு, கடந்த மாதம் மீண்டும் கோபத்தின் உச்சத்திற்கே சென்றது. அதன்விளைவாக அனைத்து நாடுகளும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டாம் என உத்தரவிட்டது. சமீப வாரங்களாக ராணுவ மோதல்களுக்கும் தாயாராகி வருகிறது. ஈரானின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும்விதமாக மத்திய கிழக்கு பகுதியில் கூடுதல் படைகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா கூறியது.

இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளில் போர் உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

அயதுல்லா காமேனி அரசாங்கத்தின் உயர் ராணுவ அதிகாரியான யாஹ்யா ரஹீம் சஃபாவி இது குறித்து பேசுகையில், ''ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க ராணுவ வாகனங்கள் உள்ளன தங்கள் படையின் முழுமையான பலம் என்னவென்று அமெரிக்காவுக்கு  நன்றாகத் தெரியும். இது எங்கள் ஈரானின் புரட்சிகர

காவலர்களின் நிலத்திலிருந்து கடலை நோக்கி ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க ராணுவ வாகனங்கள் உள்ளது என்பதும் பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க மற்றும் வெளிநாட்டு கடற்படையினருக்கும் நன்கு தெரியும்.

பாரசீக வளைகுடாவில் முதல் புல்லட் சுடப்படும்போது எண்ணெய் விலை 100 டாலருக்கும் மேலாக உயரும். இது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு தாங்க முடியாததாக இருக்கும்''

இவ்வாறு ரஹீம் சபாவி, தெரிவித்ததாக ஃபர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அதன் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா செய்துகொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை கண்டனம் செய்தார்,

''இவ் ஒப்பந்தம் நிரந்தரமற்றது. மேலும், ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தை இது உள்ளடக்கவில்லை. மத்திய கிழக்கில் மோதலுக்கான சூழலுக்கு இதுவே வழிவகுக்கும்'' என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். புதிய ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள பேச்சுவார்த்தை அமர்வுக்காக  கடந்த வாரம் ஈரான் செல்லவேண்டும் என்று தான் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஈரான் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி, மேஜர் ஜெனரல் மொஹமட் பாகெரி ''ஈரானின் ஏவுகணை திட்டம் தொடர்பாக வாஷிங்டனுடன் எந்த பேச்சுவார்த்தையும் கைவிடப்படாது, அதேநேரம் ஈரானின் தற்காப்பு திறன்களில் இருந்து ஈரானிய நாடு கிஞ்சித்தும் பின்வாங்க கூடாது'' என்று தெரிவித்ததாக ஃபார்ஸ் செய்திநிறுவனம் தெரிவித்தது.

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி ஒரு பரிந்துரையை அளித்தார், இது குறித்து அவர் தெரிவிக்கும்போது, ''அமெரிக்கா கவுரவமாக நடந்துகொண்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கலாம், ஆனால் டெஹ்ரான் தானாக சென்று பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காது'' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close