[X] Close

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக போட்டியிட ட்ரம்ப் விருப்பம்


  • kamadenu
  • Posted: 01 Jun, 2019 13:11 pm
  • அ+ அ-

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை வரும் ஜுன் 18 ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ வரும் ஜீன் 18 ஆம் தேதி ஃபுளோரிடா மாகாணத்தின் ஒர்லாண்டோ நகரில் அம்வே செண்டரில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை அறிவிக்க உள்ளேன். இந்த வரலாற்று பேரணியில் அனைவரும் இணைவீர் “ என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு  நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில்  ஜனநாயகக் கட்சி  ட்ரம்ப்பின் அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குடியரசு கட்சி சார்பாக தாம் மீண்டும் போட்டியிட விரும்புவதாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close