[X] Close

ஆப்பரேஷன் தியேட்டரில் ஆடிப்பாடிய மருத்துவர்: வழக்கு விசாரணையில் அதிர்ச்சித் தகவல்


us-doctor-rapped-danced-during-plastic-surgeries-as-patients-lay-sedated-lawsuits-say

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Jun, 2018 17:40 pm
  • அ+ அ-

அமெரிக்காவின் அட்லான்டா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியில் தன்னை சீரிய காஸ்மடிக் அறுவை நிபுணர் என அடையாளப்படுத்திக் கொண்டு வேலை பார்த்துவந்த விண்டெல் டேவிஸ் பூட் என்ற பெண் மருத்துவர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.

காரணம் அறுவை சிகிச்சை அறையில் நோயாளியை சிகிச்சை மேடையில் கிடத்திவிட்டு ரேப் இசைக்கு ஏற்ப அவர் நடனமாடும் காட்சி அடங்கிய வீடியோக்கள் வெளியானதுதான்.

கடந்த 2016-ம் ஆண்டு கார்னிலியஸ் என்ற பெண் தனக்கு காஸ்மடிக் சர்ஜரி செய்ய வேண்டும் எனக் கூறி பூட்டை நாடியிருக்கிறார். பூட்டும் பல்வேறு கட்டங்களாக சிகிச்சையை பிரித்து எழுதிக் கொடுத்திருக்கிறார்.
லிப்போ சக்சன் சிகிச்சையையும் பரிந்துரைத்திருக்கிறார். லேசர் சிகிச்சை என்று பணம் வாங்கியவர் கார்னிலியஸ் மருத்துவமனைக்கு வந்தபோது அவருக்கு பழைய முறையிலேயே சிகிச்சையை செய்திருக்கிறார். சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போதே கார்னிலியஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் 911 உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு அவரை மேல் சிகிச்சைக்கு அனுப்பியிருக்கிறார் பூட். 

ஆனால், அதற்குள் பூட்டுக்கு மூளையில் சிதைவு ஏற்பட்டுள்ளது. இப்போது அவர் நிரந்தரமாக படுக்கையில் தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து செய்திகள் உள்ளூர் சேனல்களில் வெளியாக பூட் மீது 7 வழக்குகள் பதிவாகின. பூட்டிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 7 பெண்கள் 7 விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், பூட்டிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அறுவை சிகிச்சையின்போது அவர் அலட்சியமாக நடந்து கொண்டது அம்பலமாகியிருக்கிறது.

அறுவை சிகிச்சை அறையில் நோயாளிகளை மயக்க நிலையில் வைத்துவிட்டு அவர்களைச் சுற்றி பூட் ரேப் இசைக்கு ஆடிப்பாடியது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பூட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான சில வீடியோக்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close