[X] Close

ஆப்கானில் இரண்டு நாட்களில் அடுத்தடுத்து தீவிரவாதத் தாக்குதல்


  • kamadenu
  • Posted: 31 May, 2019 16:48 pm
  • அ+ அ-

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தற்கொலைப்படைத் தாக்குதலில்  7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கான் போலீஸார் தரப்பில்,”ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கிழக்குப் பகுதியில் இன்று  ஜலாலாபாத் பகுதியில்  (வெள்ளிக்கிழமை) கார் குண்டு தற்கொலைப்படைத் தாக்குதலில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர். 

இந்தத் தாக்குதலில் பலியானவர்களின் முழு விவரம் இதுவரை தெரியவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

முன்னதாக, ஆப்கான் தலைநகர் லாகூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை தீவிரவாதிகள்  தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் பலியாகினர்.

இதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கடந்த இரண்டு நாட்களில் ஆப்கானில் அடுத்தடுத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நகரில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close