[X] Close
 

பிகினி உடைக்கு குட்பை சொல்லும் அழகிப்போட்டி 


miss-america-drops-bikini-round

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Jun, 2018 09:25 am
  • அ+ அ-

மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியை நடத்தும் அமைப்பானது இனிமேல் தாங்கள் நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களின் அழகை பிகினி உடையைக் கொண்டும் ஈவினிங் கவுன் கொண்டும் நிர்ணயம் செய்யும் முறை விட்டொழிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் (@MissAmericaOrg), "#byebyebikini நாங்கள் புதியதொரு மாற்றத்தை நோக்கி நகர்கிறோம். இனியும் நீச்சல் உடைகள், பிகினி உடைகள், நைட் கவுன்கள் போடச் சொல்லி அழகிப்போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களின் அழகை நிர்ணயிக்கப்போவதில்லை." எனத் தெரிவித்துள்ளது.

மிஸ் அமெரிக்கா குழுமத்தின் பொறுப்பாளார்களுல் ஒருவரான கிரெட்சன் கார்ல்சன் கூறும்போது, "இனியும் நாங்கள் எங்கள் போட்டியாளர்கள் வெறும் புற அழகைக் கொண்டு முடிவு செய்யப்போவதில்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதின் ஆழத்தைப் பொறுத்தே அவர்களைத் தேர்வு செய்யப் போகிறோம்" என்றார்.
 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close