[X] Close

ஹங்கேரியில் படகு விபத்து: 7 பேர் பலி; 20 பேர் மாயம்


7-20

  • kamadenu
  • Posted: 30 May, 2019 17:28 pm
  • அ+ அ-

ஹங்கேரியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். 20 பேர் மாயமாகினர்.

இதுகுறித்து ஹங்கேரியன் போலீஸார் தரப்பில், “ ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ஓடும் டானுபே ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகினர். அவர்களைத் தேடும்பணி நடந்து வருகிறது.

படகில் தென்கொரியாவைச் சேர்ந்த 32 சுற்றுலாப் பயணிகளும் ஹங்கேரியைச் சேர்ந்த 2 பணியாளர்களும் இருந்தனர். தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் சிசிடிவி வீடியோக்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

விபத்தில் பலியானவர்களின் உடல்களை தென்கொரிய தூதரக அதிகாரிகள் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஹங்கேரியில் நடந்த மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close