[X] Close

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


  • kamadenu
  • Posted: 30 May, 2019 16:54 pm
  • அ+ அ-

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில்,” எல் சால்வடார் நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 40 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள லா லிபெர்டட்டில் இன்று (வியாழக்கிமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை.

சில நொடிகள் அதிர்வுகள் நீடித்ததாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close