[X] Close

மெக்ஸிகோவில் பேருந்து - லாரி மோதி விபத்து: 23 பேர் பலி


23

  • kamadenu
  • Posted: 30 May, 2019 16:14 pm
  • அ+ அ-

மெக்ஸிகோவில் பேருந்துயும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மெக்ஸிகோ போலீஸார் தரப்பில், “மெக்ஸிகோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வேராகர்ஸ் மாகாணத்தில் மல்ட்ராடா நகருக்கு அருகில் கத்தோலிக்க பக்தர்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் பொதுமக்கள் 21 பேர் பலியாகினர்.  30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த காரணம் குறித்த விசாரணை நடந்து வருவதாக மெக்ஸிகோ போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவை அளிப்போம் என்று மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close