[X] Close

சிரியாவில் அரசுப் படை தாக்குதல்: பொதுமக்கள் 21 பேர் பலி


21

  • kamadenu
  • Posted: 29 May, 2019 18:52 pm
  • அ+ அ-

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். இதில் 9 பேர் குழந்தைகள்.

இதுகுறித்து லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கண்காணிப்புக் குழு, ''சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 21 பேர் பலியாகினர். இதில் 9 பேர் குழந்தைகள். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சிரியா - ரஷ்யப் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் 229 பேர் பலியாகி இருப்பதாகவும், 727 பேர் காயமடைந்து இருப்பதாகவும் ஐ.நா.சபை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சிரியாவில் பொதுமக்களைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close