[X] Close

ஒரு முத்தம் ஏற்படுத்திய சர்ச்சை!


philippine-president-duterte-condemned-for-kissing-overseas-worker

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jun, 2018 12:49 pm
  • அ+ அ-

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விழா மேடையில் பெண் ஒருவரின் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்ணியவாதிகள் பலரும் ரோட்ரிகோவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தென் கொரியா சென்றிருந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அங்கு புலம்பெயர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டவர் மத்தியில் உரையாற்றினார். அப்போது மேடைக்கு அவர் இரண்டு பெண்களை அழைத்தார். ஒருவரை அரவணைத்து கன்னத்தில் முத்தமிட்டார் மற்றொரு பெண்ணின் உதட்டில் முத்தமிட்டார்.

அதிபரின் வற்புறுத்தலின் பேரிலேயே அந்தப் பெண் இதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறி ரோட்ரிகோவை பலரும் வசைபாடி வருகின்றனர்.
ரோட்ரிகோ பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளைத் தெரிவிப்பது இது முதன்முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரோட்ரிகோ, "அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பெண் போராளிகளின் பிறப்புறுப்புகளில் சுடுங்கள்" என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த சம்பவத்தை பிலிப்பைன்ஸ் உரிமைகள் அமைப்பான காப்ரியேலா "பெண்களை வெறுக்கும் ஒரு அதிபரின் வெறுக்கத்தக்க நாடகம்" என விமர்சித்துள்ளது.
மேலும், ரோட்ரிகோ தனது இத்தகைய நடவடிக்கைகள் மூலம், அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் அரங்கேற்றும் கொலைகளையும், வரி சீர்த்திருத்தம் என்ற பெயரில் கட்டவிழ்த்துள்ள பொருளாதார கொள்கைகளையும் ஊழல்களையும் மறைக்க முயல்கிறார் என அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close